அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"பலவீனமான இறைநம்பிக்கையாளரைவிட, பலமான இறைநம்பிக்கையாளர் சிறந்தவரும் அல்லாஹ்வுக்கு மிக விருப்பமானவரும் ஆவார். ஆயினும், (இறைநம்பிக்கையாளர்கள்) அனைவரிடமும் நன்மை உள்ளது. உனக்குப் பயனளிப்பதையே நீ ஆர்வத்துடன் நாடு. அல்லாஹ்விடம் உதவி தேடு; சோர்வடைந்து விடாதே! உனக்கு ஏதேனும் (துன்பம்) ஏற்பட்டால், 'நான் (அப்படிச்) செய்திருந்தால், (விளைவு) இப்படி இப்படியெல்லாம் இருந்திருக்குமே!' என்று கூறாதே. மாறாக,
**'கத்(த)ருல்லாஹி வமா ஷாஅ ஃபஅல'**
(இது அல்லாஹ்வின் விதி; அவன் நாடியதைச் செய்தான்)
என்று கூறு. ஏனெனில், 'லவ்' (நான் அப்படிச் செய்திருந்தால்...) என்று கூறுவது ஷைத்தானின் செயலுக்கே வழிவகுக்கும்."