நான், "அல்லாஹ்வின் தூதரே! செயல்களில் சிறந்தது எது?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதும் அவனது பாதையில் ஜிஹாத் செய்வதும் ஆகும்" என்று பதிலளித்தார்கள்.
நான், "எந்த அடிமையை விடுதலை செய்வது சிறந்தது?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "எஜமானர்களிடம் அதிக மதிப்புமிக்கவரும், அதிக விலை மதிப்புள்ளவரும் தான்" என்று பதிலளித்தார்கள்.
நான், "(இதை) நான் செய்யவில்லையென்றால்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஒரு கைவினைஞருக்கு உதவுங்கள் அல்லது தொழில் அறியாதவருக்கு (ஏதேனும்) செய்து கொடுங்கள்" என்று கூறினார்கள்.
நான், "அல்லாஹ்வின் தூதரே! (நற்காரியங்கள்) சிலவற்றைச் செய்ய நான் பலவீனமாக இருந்தால் (என்ன செய்வது என்று) கூறுங்கள்?" என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள், "மக்களுக்குத் தீங்கிழைப்பதிலிருந்து விலகி இருப்பீராக! ஏனெனில், நிச்சயமாக அது உமக்காக உமது நஃப்ஸுக்காக (ஆன்மாவுக்காக) நீர் செய்யும் தர்மமாகும்" என்று பதிலளித்தார்கள்.