حَدَّثَنَا عَاصِمُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ الْمَقْبُرِيِّ، {عَنْ أَبِيهِ،} عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ يَا نِسَاءَ الْمُسْلِمَاتِ لاَ تَحْقِرَنَّ جَارَةٌ لِجَارَتِهَا، وَلَوْ فِرْسِنَ شَاةٍ .
அபு ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஓ முஸ்லிம் பெண்களே! உங்களில் எவரும் தம் அண்டை வீட்டுப் பெண்மணி அனுப்பும் அன்பளிப்பை, அது ஆட்டுக்கால்களாக (சதையில்லாத கால் பகுதி) இருந்தாலும் கூட, அற்பமாகக் கருத வேண்டாம்."
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، حَدَّثَنَا سَعِيدٌ ـ هُوَ الْمَقْبُرِيُّ ـ عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقُولُ يَا نِسَاءَ الْمُسْلِمَاتِ لاَ تَحْقِرَنَّ جَارَةٌ لِجَارَتِهَا وَلَوْ فِرْسِنَ شَاةٍ .
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள்: "ஓ முஸ்லிம் பெண்களே! ஓர் அண்டை வீட்டுக்காரி, தன் அண்டை வீட்டுக்காரி அளிக்கும் அன்பளிப்பை, அது ஆட்டின் குளம்பாக இருந்தாலும் சரியே, அற்பமாகக் கருத வேண்டாம்."
وعنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : يا نساء المسلمات لا تحقرن جارة لجارتها ولو فرسن شاة ((متفق عليه)).
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "முஸ்லிம் பெண்களே! உங்களில் எந்தப் பெண்ணும் தன் அண்டை வீட்டுக்காரிக்குக் கொடுப்பதை, அது ஓர் ஆட்டின் கால் குளம்பாக இருந்தாலும் அற்பமாகக் கருத வேண்டாம்".