அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“ஈமான் (இறைநம்பிக்கை) எழுபதுக்கும் மேற்பட்ட அல்லது அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டதாகும். அவற்றில் மிகச் சிறந்தது, ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று கூறுவதாகும். அவற்றில் மிகத் தாழ்ந்தது, பாதையிலிருந்துத் தொல்லை தருபவற்றை அகற்றுவதாகும். மேலும், வெட்கம் ஈமானின் ஒரு கிளையாகும்.”
அல்லாஹ்வின் கூற்றான: "நிச்சயமாக நாம் அவர்கள் அனைவரையும் கணக்குக் கேட்போம்; அவர்கள் செய்து கொண்டிருந்த அனைத்தையும் பற்றி (15:92 & 93)" என்பது குறித்து, நபி (ஸல்) அவர்கள், "லா இலாஹ இல்லல்லாஹ் என்று கூறுவதைப் பற்றி" என்று கூறினார்கள்.