அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“ஒரு முஸ்லிம் அடியார் - அல்லது ஓர் இறைநம்பிக்கையாளர் - ஒளுச் செய்யும்போது, அவர் தம் முகத்தைக் கழுவினால், அவர் தம் கண்களால் பார்த்த ஒவ்வொரு பாவமும் தண்ணீருடன் - அல்லது தண்ணீரின் கடைசித் துளியுடன் - அவர் முகத்திலிருந்து வெளியேறிவிடும். அவர் தம் கைகளைக் கழுவினால், அவருடைய கைகள் (தீண்டிப்) புரிந்த ஒவ்வொரு பாவமும் தண்ணீருடன் - அல்லது தண்ணீரின் கடைசித் துளியுடன் - அவர் கைகளிலிருந்து வெளியேறிவிடும். அவர் தம் கால்களைக் கழுவினால், அவருடைய கால்கள் நடந்து சென்ற ஒவ்வொரு பாவமும் தண்ணீருடன் - அல்லது தண்ணீரின் கடைசித் துளியுடன் - வெளியேறிவிடும். இறுதியில் அவர் பாவங்களிலிருந்து தூய்மையானவராக வெளிவருவார்.”