நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பெரும் பாவங்களைத் தவிர்த்துக் கொள்ளும் பட்சத்தில், ஐந்து (வேளைத்) தொழுகைகளும், மேலும் ஒரு ஜும்ஆ தொழுகையிலிருந்து (அடுத்த) ஜும்ஆ தொழுகை வரையிலும், மேலும் ஒரு ரமலானிலிருந்து அடுத்த ரமலான் வரையிலும் அவற்றுக்கு இடையில் (அவற்றின் இடைவெளிகளில்) செய்யப்பட்ட (பாவங்கள்)க்கு பரிகாரங்களாகும்.