அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நிச்சயமாக அல்லாஹ், ஓர் அடியான் ஒரு வேளை உணவை உண்டு அதற்காகத் தம்மைப் புகழ்வதையும், அல்லது ஒரு முறை பானத்தைப் பருகி அதற்காகத் தம்மைப் புகழ்வதையும் கண்டு திருப்தியடைகிறான்."