நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக மார்க்கம் எளிதானது. இம்மார்க்கத்தில் எவரேனும் (தம் சக்திக்கு மீறி) கடுமை காட்டினால், அவரை அது மிகைத்துவிடும். ஆகவே, நீங்கள் நேர்மையானதையே கடைப்பிடியுங்கள்; (பூரணத்துவத்தை) நெருங்கிச் செல்லுங்கள்; நற்செய்தி பெறுங்கள். மேலும், காலையிலும், மாலையிலும், இரவின் ஒரு பகுதியிலும் (வணக்கத்தின் மூலம்) உதவி தேடுங்கள்.”