அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் எவரேனும் தொழும்போது தூக்கக் கலக்கம் அடைந்தால், தம்மிடமிருந்து தூக்கம் நீங்கும் வரை அவர் (படுத்துத்) தூங்கட்டும். ஏனெனில், உங்களில் ஒருவர் தூக்கக் கலக்கத்துடன் தொழுதால், அவர் (இறைவனிடம்) பாவமன்னிப்புக் கோரப்போய், தம்மைத்தாமே சபித்துக்கொள்ளக்கூடும் என்பதை அவர் அறியமாட்டார்."
ஆயிஷா (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்:
"உங்களில் எவரேனும் தொழுகையில் தூக்கம் மேலிட்டால், தூக்கம் அவரைவிட்டு நீங்கும்வரை அவர் உறங்கட்டும். ஏனெனில், உங்களில் ஒருவர் தூக்கக் கலக்கத்துடன் தொழும்போது, அவர் (அல்லாஹ்விடம்) மன்னிப்புக் கோரப்போய், தம்மைத்தாமே சபித்துக்கொள்ளக்கூடும்."