ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“எனது உதாரணமும் உங்களது உதாரணமும், நெருப்பை மூட்டிய ஒரு மனிதரின் உதாரணத்தைப் போன்றது. பூச்சிகளும் விட்டில்பூச்சிகளும் அதில் விழத் தொடங்கின; அவரோ அவற்றை (நெருப்பிலிருந்து) விரட்டுகிறார். நான் உங்களை (நரக) நெருப்பிலிருந்து (காப்பாற்ற) உங்கள் இடுப்புப் பகுதியைப் பிடித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் நீங்களோ என் கையிலிருந்து நழுவிச் செல்கிறீர்கள்.”