அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்ததாவது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"யார் (மக்களை) நேர்வழிக்கு அழைக்கின்றாரோ, அவருக்கு, அதனைப் பின்பற்றியவர்களின் நற்கூலிகளைப் போன்ற நற்கூலி உண்டு; அது அவர்களின் நற்கூலிகளில் எதையும் குறைத்துவிடாது.
மேலும், யார் (மக்களை) வழிகேட்டிற்கு அழைக்கின்றாரோ, அவருக்கு, அதனைப் பின்பற்றியவர்களின் பாவங்களைப் போன்ற பாவம் உண்டு; அது அவர்களின் பாவங்களில் எதையும் குறைத்துவிடாது."