அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹுதைல் குலத்தைச் சேர்ந்த) பனூ லிஹ்யான் கூட்டத்தாரிடம் ஒரு படையை அனுப்பினார்கள். அப்போது, "ஒவ்வொரு இரண்டு ஆண்களிலிருந்தும் ஒருவர் புறப்பட்டுச் செல்லட்டும்; (அதற்கான) நற்கூலி அவர்கள் இருவருக்கும் உரியதாகும்" என்று கூறினார்கள்.