உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இதற்கு முந்தைய செய்தியைப்) போன்றே கூறினார்கள். ஆனால் அதில், "யார் (தீமையை) மறுத்துவிட்டாரோ அவர் (குற்றத்திலிருந்து) நீங்கிவிட்டார்; யார் (அதை) வெறுத்துவிட்டாரோ அவர் தப்பித்துக்கொண்டார்" என்று கூறினார்கள்.
உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்... (எனத் தொடங்கி, முந்தைய ஹதீஸில் உள்ளதைப்) போன்றே இங்கும் இடம்பெற்றுள்ளது. ஆயினும், “ஆனால் எவர் (அத்தீய செயலைப்) பொருந்திக்கொண்டாரோ, (அவர்களைப்) பின்பற்றினாரோ...” எனும் வாசகத்தை அறிவிப்பாளர் இதில் குறிப்பிடவில்லை.