இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2090ஸஹீஹ் முஸ்லிம்
وَفِي حَدِيثِ ابْنِ الْمُثَنَّى قَالَ سَمِعْتُ النَّضْرَ بْنَ أَنَسٍ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ سَهْلٍ التَّمِيمِيُّ،
حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ عُقْبَةَ، عَنْ كُرَيْبٍ، مَوْلَى
ابْنِ عَبَّاسٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَأَى خَاتَمًا مِنْ
ذَهَبٍ فِي يَدِ رَجُلٍ فَنَزَعَهُ فَطَرَحَهُ وَقَالَ ‏ ‏ يَعْمِدُ أَحَدُكُمْ إِلَى جَمْرَةٍ مِنْ نَارٍ فَيَجْعَلُهَا فِي
يَدِهِ ‏ ‏ ‏.‏ فَقِيلَ لِلرَّجُلِ بَعْدَ مَا ذَهَبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم خُذْ خَاتَمَكَ انْتَفِعْ بِهِ
‏.‏ قَالَ لاَ وَاللَّهِ لاَ آخُذُهُ أَبَدًا وَقَدْ طَرَحَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரின் கையில் தங்க மோதிரம் ஒன்றைக் கண்டார்கள். உடனே அதைக்கழற்றி எறிந்துவிட்டு, "உங்களில் ஒருவர் (நரகத்தின்) நெருப்புக் கங்கு ஒன்றை நாடி, அதைத் தம் கையில் வைத்துக் கொள்கிறாரே!" என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்ற பிறகு அந்த மனிதரிடம், "உமது மோதிரத்தை எடுத்து, அதிலிருந்து பயனடைந்துகொள்" என்று கூறப்பட்டது. அதற்கு அவர், "இல்லை! அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எறிந்துவிட்ட ஒன்றை நான் ஒருபோதும் எடுக்க மாட்டேன்" என்று கூறினார்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح