அன்-நுஃமான் இப்னு பஷீர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள், "நீங்கள் இறைநம்பிக்கையாளர்களை, அவர்கள் தங்களுக்குள் கருணை காட்டுவதிலும், தங்களுக்குள் அன்பு செலுத்துவதிலும், கனிவாக நடந்துகொள்வதிலும், ஓர் உடலைப் போன்று இருப்பதைக் காண்பீர்கள். அந்த உடலில் ஏதேனும் ஓர் உறுப்பு சுகவீனமுற்றால், அதனுடன் முழு உடலும் (அதன் அழைப்புக்கு பதிலளித்து) தூக்கமின்மையையும் காய்ச்சலையும் பகிர்ந்துகொள்ளும்."
நுஃமான் இப்னு பஷீர் (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதாக அறிவித்தார்கள்: முஃமின்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதிலும், கருணை காட்டுவதிலும், பரிவு கொள்வதிலும் ஓர் உடலைப் போன்றவர்கள். அதன் ஓர் உறுப்பு நோயுற்றால், மற்ற உடல் உறுப்புகள் அனைத்தும் தூக்கமின்மையாலும் காய்ச்சலாலும் (அதன் துன்பத்தில்) பங்கெடுத்துக் கொள்கின்றன.