ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஒரு ஏழைப் பெண் **தன் இரண்டு மகள்களைச் சுமந்துகொண்டு** என்னிடம் வந்தாள். நான் அவளுக்கு மூன்று பேரீச்சம்பழங்களைக் கொடுத்தேன். அவள் **அவ்விருவரில் ஒவ்வொருவருக்கும்** ஒரு பேரீச்சம்பழத்தைக் கொடுத்தாள். பின்னர் ஒரு பேரீச்சம்பழத்தை உண்பதற்காகத் தன் வாய்க்குக் கொண்டு சென்றாள். ஆனால் அவளுடைய **இரு மகள்களும்** அதையும் (உணவாகத் தருமாறு) கேட்டனர். ஆகவே அவள் உண்ண விரும்பிய அப்பேரீச்சம்பழத்தை **அவ்விருவருக்கும் பிளந்து** கொடுத்தாள். அவளுடைய இந்தச் செயல் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவள் செய்ததை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறினேன். அதற்கு அவர்கள், "நிச்சயமாக அல்லாஹ் அதன் காரணமாக அவளுக்குச் சொர்க்கத்தைக் **கடமையாக்கிவிட்டான்**; அல்லது அதன் காரணமாக அவளை நரகத்திலிருந்து **விடுவித்துவிட்டான்**" என்று கூறினார்கள்.