உஸாமா பின் ஸைத் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் எனக்குப் பின்னால் விட்டுச் சென்ற ஃபித்னாக்களில், ஆண்களுக்கு பெண்களால் ஏற்படும் ஃபித்னாவை விட அதிகத் தீங்கிழைக்கக்கூடிய ஃபித்னா வேறு எதுவும் இல்லை.
உஸாமா பின் ஸைத் பின் ஹாரித் (ரழி) அவர்களும், ஸயீத் பின் ஸைத் பின் அம்ர் பின் நௌஃபல் (ரழி) அவர்களும் ஆகிய இருவரும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள் என அறிவித்தார்கள்:
நான் எனக்குப் பிறகு, மக்களுக்கு, பெண்களால் ஆண்களுக்கு ஏற்படும் தீங்கைத் தவிர வேறு எந்தக் குழப்பத்தையும் விட்டுச் செல்லவில்லை.