அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் செலவிடும் ஒரு தீனார், ஓர் அடிமையை விடுதலை செய்வதற்காக நீங்கள் செலவிடும் ஒரு தீனார், ஏழை ஒருவருக்கு தர்மமாக நீங்கள் வழங்கும் ஒரு தீனார், உங்கள் குடும்பத்தினருக்காக நீங்கள் செலவிடும் ஒரு தீனார் (ஆகிய இவற்றில்), நன்மையில் மிக மகத்தானது உங்கள் குடும்பத்தினருக்காக நீங்கள் செலவிட்ட தீனாரே ஆகும்.”