சஃத் பின் அபீ வக்காஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "நீங்கள் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காகச் செலவு செய்யும் எதற்கும் கூலி கொடுக்கப்படுவீர்கள்; அது நீங்கள் உங்கள் மனைவியின் வாயில் வைக்கும் ஒரு கவளம் உணவாக இருந்தாலும் சரி."