அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹஸன் இப்னு அலீ (ரலி) ஸதக்காவின் பேரீச்சம் பழங்களில் ஒன்றை எடுத்துத் தமது வாயில் வைத்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "சீ! சீ! அதை எறிந்துவிடு. நாம் ஸதக்காவை உண்பதில்லை என்பது உனக்குத் தெரியாதா?" என்று கூறினார்கள்.
ஷுஅபா அவர்கள் வழியாக வரும் இந்த அறிவிப்பாளர் தொடரில், இப்னு முஆத் அவர்கள் கூறியதைப் போன்றே, "நாங்கள் தர்மப் பொருளை (சதக்காவை) உண்ண மாட்டோம்" என்று இடம்பெற்றுள்ளது.