நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அறிந்து கொள்ளுங்கள்! என் தந்தையர்களின் சந்ததியினர், அதாவது, இன்னின்னார், என் நண்பர்கள் அல்லர். நிச்சயமாக அல்லாஹ்வும் இறையச்சமுடைய நம்பிக்கையாளர்களும் என் நண்பர்கள் ஆவார்கள்" என்று கூறுவதை இரகசியமாக அல்லாமல், தெளிவாகக் கேட்டேன்.