அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் கூறினார்கள்: "அல்லாஹ்வின் வேதத்தை மக்களில் நன்கு ஓதத் தெரிந்தவரும், ஓதுவதில் சிறந்தவருமே அவர்களுக்குத் தலைமை தாங்கித் தொழுகை நடத்த வேண்டும். அவர்கள் ஓதுவதில் சமமாக இருந்தால், அவர்களில் ஹிஜ்ரத் செய்வதில் முந்தியவர் (தலைமை தாங்கட்டும்). ஹிஜ்ரத் செய்வதிலும் அவர்கள் சமமாக இருந்தால், அவர்களில் வயதில் மூத்தவர் (தலைமை தாங்கட்டும்). ஒரு மனிதருடைய வீட்டிலோ அல்லது அவருடைய அதிகாரத்திற்குட்பட்ட இடத்திலோ அவருக்குத் தலைமை தாங்கி (வேறொருவர்) தொழுகை நடத்த வேண்டாம். அவரது வீட்டில் அவருக்கென ஒதுக்கப்பட்ட கண்ணியத்திற்குரிய இடத்தில், அவர் உமக்கு அனுமதியளித்தாலே தவிர அமர வேண்டாம்."