நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்:
"மக்கள் வெள்ளி மற்றும் தங்கச் சுரங்கங்களைப் போன்றவர்கள். அறியாமைக் காலத்தில் (ஜாஹிலிய்யா) அவர்களில் சிறந்தவர்கள், (மார்க்கத்தைப்) புரிந்து கொண்டால் இஸ்லாத்திலும் சிறந்தவர்களாக இருப்பார்கள். மேலும், ஆன்மாக்கள் ஒன்று திரட்டப்பட்ட படைகளாகும்; அவற்றுள் எவை (ஆன்ம உலகில்) தங்களுக்குள் பரஸ்பரம் அறிமுகமாகிக் கொண்டனவோ, அவை (இவ்வுலகில்) ஒன்றுக்கொன்று இணக்கமாக இருக்கும்; அவற்றுள் எவை தங்களுக்குள் அறிமுகமில்லாது இருந்தனவோ, அவை (இவ்வுலகில்) ஒன்றுக்கொன்று வேறுபட்டிருக்கும்."