அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நீங்கள் ஈமான் கொள்ளாத வரை சொர்க்கத்தில் நுழைய மாட்டீர்கள்; மேலும், நீங்கள் ஒருவரையொருவர் நேசிக்காத வரை ஈமான் கொள்ள மாட்டீர்கள். நான் உங்களுக்கு ஒரு காரியத்தை அறிவிக்கட்டுமா? அதை நீங்கள் செய்தால் ஒருவரையொருவர் நேசிப்பீர்கள்; உங்களுக்கிடையே ஸலாமைப் பரப்புங்கள்."