அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ் கூறினான்: 'எவர் என் நேசருடன் பகைமை கொள்கிறாரோ, அவருக்கு எதிராக நான் போர் பிரகடனம் செய்கிறேன். என் அடியான், நான் அவன் மீது கடமையாக்கியுள்ளவைகளை விட எனக்கு அதிக விருப்பமான வேறெந்தச் செயலைக் கொண்டும் என்னிடம் நெருங்குவதில்லை. மேலும், என் அடியான் உபரியான (நஃபில்) வணக்கங்களைக் கொண்டு என்னிடம் தொடர்ந்து நெருங்கிக் கொண்டே இருக்கிறான்; இறுதியில் நான் அவனை நேசித்துவிடுகிறேன். அவ்வாறு நான் அவனை நேசித்துவிட்டால், அவன் கேட்கும் செவியாகவும், அவன் பார்க்கும் பார்வையாகவும், அவன் பற்றும் கையாகவும், அவன் நடக்கும் காலாகவும் நான் ஆகிவிடுகிறேன். அவன் என்னிடம் கேட்டால் நிச்சயம் நான் அவனுக்குக் கொடுப்பேன். அவன் என்னிடம் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பளிப்பேன். நான் செய்யும் காரியங்களில், ஓர் இறைநம்பிக்கையாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயங்குவதைப் போன்று வேறெதிலும் தயங்குவதில்லை. அவன் மரணத்தை வெறுக்கிறான்; நானும் அவனுக்குத் துன்பம் இழைப்பதை வெறுக்கிறேன்.'"