"யார் சுப்ஹு (ஃபஜ்ர்) தொழுகையைத் தொழுகிறாரோ, அவர் அல்லாஹ்வின் பாதுகாப்பில் இருக்கிறார். எனவே, அல்லாஹ் தனது பாதுகாப்பிலுள்ள எதற்காகவும் உங்களைத் தேடும் (விசாரிக்கும்) நிலை ஏற்படவேண்டாம். ஏனெனில், தனது பாதுகாப்பிலுள்ள எதற்காகவும் எவரையேனும் அவன் தேடினால், அவரை அவன் (தப்பவிடாமல்) பிடித்துவிடுவான்; பின்னர் அவரை நரக நெருப்பில் முகங்குப்புறத் தள்ளிவிடுவான்."