"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் மக்கள் வஹீ (இறைச்செய்தி)யின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டு வந்தார்கள். நிச்சயமாக வஹீ (வருவது) இப்போது நின்றுவிட்டது. இப்போது உங்களிடமிருந்து எங்களுக்கு வெளிப்படையாகத் தெரியும் செயல்களைக் கொண்டே உங்களை நாங்கள் மதிப்பிடுவோம். எனவே, யார் எங்களுக்கு நன்மையை வெளிப்படுத்துகின்றாரோ அவருக்கு நாங்கள் பாதுகாப்பளிப்போம்; அவரை நெருக்கமாக்கிக் கொள்வோம். அவருடைய அந்தரங்க விஷயத்தில் எங்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. அவருடைய அந்தரங்கம் குறித்து அல்லாஹ்வே அவரிடம் கணக்குக் கேட்பான். ஆனால், யார் எங்களுக்குத் தீமையை வெளிப்படுத்துகின்றாரோ, அவர் தனது அந்தரங்கம் நன்றாக இருப்பதாகக் கூறினாலும் சரியே; அவரை நாங்கள் நம்பவும் மாட்டோம்; உண்மையாளர் என ஏற்கவும் மாட்டோம்."