நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "யார், 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, அவன் தனித்தவன், அவனுக்கு யாதொரு இணையுமில்லை' என்றும், 'முஹம்மது (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்கள்' என்றும், 'ஈஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்கள்; மேலும் அவன் மர்யமிடம் போட்ட அவனுடைய வார்த்தையும், அவரிடமிருந்துள்ள ஓர் ஆன்மாவும் ஆவார்கள்' என்றும், 'சுவர்க்கம் உண்மையானது, நரகம் உண்மையானது' என்றும் சாட்சி கூறுகிறாரோ, அவர் எத்தகைய செயல்களைச் செய்திருந்தாலும் அல்லாஹ் அவரைச் சுவர்க்கத்தில் புகுத்துவான்."
(மற்றோர் அறிவிப்பில், "சுவர்க்கத்தின் எட்டு வாசல்களில் எதன் வழியாக அவர் விரும்புகிறாரோ (அதன் வழியாக நுழையலாம்)" என்று அதிகப்படியாக வந்துள்ளது.)
உபாதா இப்னு ஸாமித் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"எவர், 'அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையேதும் இல்லை என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்கள் என்றும், ஈஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும், அவனுடைய அடியாளுடைய மகனும், மர்யமிடம் அவன் செலுத்திய அவனுடைய வார்த்தையும், அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மாவும் ஆவார்கள் என்றும், சுவர்க்கம் உண்மையானது; நரகம் உண்மையானது என்றும்' சாட்சி கூறுகிறாரோ, அவரை அல்லாஹ் சுவர்க்கத்தின் எட்டு வாசல்களில் அவர் விரும்பும் எந்த வாசல் வழியாகவும் நுழையச் செய்வான்."