அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"என் உயிர் எவன் கையில் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக! நீங்கள் பாவம் செய்யாமல் இருந்திருந்தால், அல்லாஹ் உங்களைப் போக்கிவிட்டு, பாவம் செய்து அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரும் ஒரு கூட்டத்தினரைக் கொண்டு வந்திருப்பான்; மேலும் அவன் அவர்களை மன்னித்திருப்பான்."