அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஒரு முஸ்லிம் அவரது கப்ரில் (கல்லறையில்) விசாரிக்கப்படும்போது, அவர் அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறு யாருமில்லை என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி கூறுவார், இதுவே அல்லாஹ்வின் கூற்றின் பொருளாகும்:-- "அல்லாஹ் நம்பிக்கை கொண்டவர்களை இவ்வுலகிலும் மறுமையிலும் உறுதியான வார்த்தையைக் கொண்டு உறுதிப்படுத்துவான்." (14:27)