அபூமூஸா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ், தன் அடியார்களில் ஒரு சமுதாயத்தாருக்குக் கருணை காட்ட நாடினால், அச்சமுதாயத்தாரின் நபியை அவர்களுக்கு முன்பே கைப்பற்றிக் கொள்கிறான்; அவரை அவர்களுக்கு ஒரு முன்னோடியாகவும், (மறுமைக்குரிய) நற்கூலியாகவும் ஆக்குகிறான். மேலும் அவன் ஒரு சமுதாயத்தை அழிக்க நாடினால், அவர்களுடைய நபி உயிருடன் இருக்கும்போதே அவர்களை வேதனை செய்கிறான்; அந்த நபி பார்த்துக்கொண்டிருக்கும்போதே அவர்களை அழிக்கிறான். அவர்கள் அந்த நபியைப் பொய்யாக்கி, அவருடைய கட்டளைக்கு மாறு செய்த காரணத்தால், (அச்சமுதாயத்தின்) அழிவைக் கொண்டு அந்த நபியின் கண்களை அவன் (அல்லாஹ்) குளிர்விக்கிறான்."