முஆவியா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(எந்த) ஒரு விஷயத்திலும் என்னிடம் வற்புறுத்தாதீர்கள். ஏனெனில், அல்லாஹ்வின் மீது சத்தியமாக, உங்களில் எவரேனும் என்னிடம் எதையேனும் கேட்டு, நான் அதை வெறுக்கும் நிலையில் அவர் தமது கோரிக்கையைப் பெற்றுக் கொண்டால், நான் அவருக்குக் கொடுக்கும் அந்தப் பொருளில் அவருக்கு பரக்கத் (அருள்வளம்) செய்யப்படமாட்டாது.
முஆவியா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"கேட்கும்போது வற்புறுத்திக் கேட்காதீர்கள். உங்களில் ஒருவர் என்னிடம் எதையேனும் கேட்டு, நான் அதை விருப்பமில்லாமல் கொடுத்தால், அதில் எந்த பரக்கத்தும் இருக்காது."