அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் தன்னுடைய (செல்வத்தை) அதிகரித்துக் கொள்வதற்காக பிறருடைய செல்வத்தை யாசிக்கிறாரோ, அவர் நெருப்புக் கங்குகளை மட்டுமே யாசிக்கிறார்; எனவே, அவர் குறைவாக யாசிக்கட்டும் அல்லது அதிகமாக யாசிக்கட்டும்.