அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் இரு மலைகளுக்கு இடைப்பட்ட ஆடுகளைக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் அதை அவருக்குக் கொடுத்தார்கள். அவர் தனது கூட்டத்தாரிடம் வந்து, "என் கூட்டத்தாரே! இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! முஹம்மது (ஸல்) அவர்கள் வறுமையை அஞ்சாதவர் வழங்குவதைப் போன்று வழங்குகிறார்கள்" என்று கூறினார்.
அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: "ஒருவர் உலக(ஆதாய)த்தை மட்டுமே நாடி இஸ்லாத்தை ஏற்பார். ஆனால், உலகத்தையும் அதிலுள்ளவற்றையும் விட இஸ்லாம் அவருக்கு மிகவும் விருப்பமானதாக மாறிவிடும்."