உமர் இப்னு கத்தாப் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (செல்வத்தைப்) பங்கிட்டுக் கொடுத்தார்கள். அப்போது நான், 'அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக, தாங்கள் கொடுத்த இவர்களை விட மற்றவர்களே இதற்கு அதிகத் தகுதியுடையவர்கள்' என்று கூறினேன். அதற்கு அவர்கள் (ஸல்), 'அவர்கள் என்னிடம் தரக்குறைவாகக் கேட்பது அல்லது என்னைக் கஞ்சன் என்று கருதுவது ஆகிய இரண்டில் ஒன்றை எனக்குத் தேர்வாக்கினார்கள். நான் கஞ்சன் அல்லன்' என்று கூறினார்கள்."