இயாத் இப்னு ஹிமார் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'அல்லாஹ் எனக்கு வஹீ (இறைச்செய்தி) அறிவித்தான்: நீங்கள் பணிவுடன் நடந்துகொள்ளுங்கள். (அதன் மூலம்) உங்களில் எவரும் மற்றொருவர் மீது அத்துமீறவோ (அநியாயம் செய்யவோ) கூடாது, மேலும் எவரும் மற்றொருவர் மீது பெருமை பாராட்டவும் கூடாது.'