இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

876ஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ، حَدَّثَنَا حُمَيْدُ بْنُ هِلاَلٍ، قَالَ قَالَ أَبُو رِفَاعَةَ انْتَهَيْتُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَهُوَ يَخْطُبُ قَالَ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ رَجُلٌ غَرِيبٌ جَاءَ يَسْأَلُ عَنْ دِينِهِ لاَ يَدْرِي مَا دِينُهُ - قَالَ - فَأَقْبَلَ عَلَىَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَتَرَكَ خُطْبَتَهُ حَتَّى انْتَهَى إِلَىَّ فَأُتِيَ بِكُرْسِيٍّ حَسِبْتُ قَوَائِمَهُ حَدِيدًا - قَالَ - فَقَعَدَ عَلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَجَعَلَ يُعَلِّمُنِي مِمَّا عَلَّمَهُ اللَّهُ ثُمَّ أَتَى خُطْبَتَهُ فَأَتَمَّ آخِرَهَا ‏.‏
அபூ ரிஃபாஆ (ரழி) அறிவித்தார்கள்:

நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தபோது, நான் அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! இதோ ஓர் அந்நியர். அவர் இந்த மார்க்கத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்புகிறார். இந்த மார்க்கம் என்னவென்று அவருக்குத் தெரியாது" என்று கூறினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்துவிட்டு, தம்முடைய சொற்பொழிவை (பாதியிலேயே) விட்டுவிட்டு என்னிடம் வந்தார்கள். அப்போது அவர்களுக்கு ஒரு நாற்காலி கொண்டுவரப்பட்டது. அதன் கால்கள் இரும்பினாலானவை என நான் எண்ணினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதில் அமர்ந்து, அல்லாஹ் தங்களுக்குக் கற்பித்திருந்ததை எனக்குக் கற்பிக்க ஆரம்பித்தார்கள். பிறகு அவர்கள் (மிம்பருக்கு) தமது சொற்பொழிவுக்காக வந்து, அதை இறுதிவரை நிறைவு செய்தார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح