அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எவருடைய உள்ளத்தில் அணுவளவு பெருமை இருக்கிறதோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்.”
(அப்போது) ஒரு மனிதர், “நிச்சயமாக ஒருவர் தனது ஆடை அழகாக இருக்க வேண்டும் என்றும், தனது காலணி அழகாக இருக்க வேண்டும் என்றும் விரும்புகிறார்” என்று கூறினார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக அல்லாஹ் அழகானவன்; அவன் அழகை விரும்புகிறான். பெருமை என்பது சத்தியத்தை நிராகரிப்பதும், மக்களை இழிவாகக் கருதுவதும் ஆகும்.”