ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்னிலையில் தமது இடது கையால் சாப்பிட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "உமது வலது கையால் சாப்பிடுவீராக!" என்று கூறினார்கள். அதற்கு அவர், "என்னால் முடியாது" என்றார். நபி (ஸல்) அவர்கள், "உம்மால் முடியாமல் போகட்டும்" என்று (சாபமிட்டுக்) கூறினார்கள். பெருமையே அவரை (வலது கையால் சாப்பிடுவதிலிருந்து) தடுத்தது. அதனால், அவரால் தமது கையைத் தம் வாய்வரை உயர்த்த முடியவில்லை.