حَدَّثَنَا عَبْدَانُ، عَنْ أَبِي حَمْزَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ـ رضى الله عنهما ـ قَالَ لَمْ يَكُنِ النَّبِيُّ صلى الله عليه وسلم فَاحِشًا وَلاَ مُتَفَحِّشًا وَكَانَ يَقُولُ إِنَّ مِنْ خِيَارِكُمْ أَحْسَنَكُمْ أَخْلاَقًا .
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஃபாஹிஷ் (இயல்பாகவே ஆபாசமாகப் பேசுபவர்) ஆகவோ, முத்தஃபாஹிஷ் (வேண்டுமென்றே ஆபாசமாகப் பேச முயல்பவர்) ஆகவோ இருந்ததில்லை. மேலும் அவர்கள், “உங்களில் சிறந்தவர்கள் நற்குணத்தாலும் நன்னடத்தையாலும் சிறந்தவர்களே ஆவார்கள்” என்று கூறுவார்கள்.