அபூ உமாமா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நியாயம் தன் பக்கம் இருந்தாலும், தர்க்கம் செய்வதைத் (தேவையற்ற விவாதங்களைத்) தவிர்ப்பவருக்கு சுவர்க்கத்தின் வெளிப்புறத்தில் (தாழ்வான பகுதியில்) ஒரு வீட்டிற்கும், விளையாட்டிற்காகக் கூட பொய் சொல்வதைத் தவிர்ப்பவருக்கு சுவர்க்கத்தின் நடுவில் ஒரு வீட்டிற்கும், தன் குணத்தை அழகாக்கிக் கொள்பவருக்கு சுவர்க்கத்தின் உயர்வான பகுதியில் ஒரு வீட்டிற்கும் நான் பொறுப்பேற்கிறேன்.