ஒரு நபி (அலை) அவர்களை அவர்களுடைய சமூகத்தார் அடித்துக் காயப்படுத்தியிருந்ததாகவும், அப்போது அவர்கள் (அந்த நபி (அலை)) தங்கள் முகத்திலிருந்து இரத்தத்தைத் துடைத்துக்கொண்டே, “இறைவா! என் சமூகத்தாரை மன்னிப்பாயாக! நிச்சயமாக அவர்கள் அறியாதவர்கள்” என்று கூறிக்கொண்டிருந்ததாகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லிக்கொண்டிருந்ததை நான் இப்பொழுதும் பார்ப்பதைப் போன்று இருக்கிறது.