حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لَيْسَ الشَّدِيدُ بِالصُّرَعَةِ، إِنَّمَا الشَّدِيدُ الَّذِي يَمْلِكُ نَفْسَهُ عِنْدَ الْغَضَبِ .
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "மக்களை மல்யுத்தத்தில் (அல்லது உடல் பலத்தால்) தோற்கடிப்பவர் வலிமையானவர் அல்லர்; மாறாக, கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவரே வலிமையானவர் ஆவார்."
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"மல்யுத்தத்தில் (எதிராளிகளை) வீழ்த்தி வெற்றி பெறுபவர் வலிமையானவர் அல்லர், மாறாக கோபம் ஏற்படும்போது தன்னை அடக்கிக் கொள்பவரே வலிமையானவர் ஆவார்."
وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لَيْسَ الشَّدِيدُ بِالصُّرَعَةِ إِنَّمَا الشَّدِيدُ الَّذِي يَمْلِكُ نَفْسَهُ عِنْدَ الْغَضَبِ .
மற்போரில் (பலரை) வீழ்த்தி வெற்றி பெறும் வல்லமை கொண்டவர் (உண்மையான) வலிமையானவர் அல்லர். மாறாக, கோபம் வரும்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவரே (உண்மையான) வலிமையானவர் ஆவார்.