இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

7053ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُسَدَّدٌ، عَنْ عَبْدِ الْوَارِثِ، عَنِ الْجَعْدِ، عَنْ أَبِي رَجَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ مَنْ كَرِهَ مِنْ أَمِيرِهِ شَيْئًا فَلْيَصْبِرْ، فَإِنَّهُ مَنْ خَرَجَ مِنَ السُّلْطَانِ شِبْرًا مَاتَ مِيتَةً جَاهِلِيَّةً ‏ ‏‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "யார் தன்னுடைய ஆட்சியாளரிடமிருந்து அவர் விரும்பாத ஒன்றைக் காண்கிறாரோ அவர் பொறுமையாக இருக்கட்டும். ஏனெனில், எவர் ஆட்சியாளருக்கு சிறிதளவேனும் (சிறிதளவு = ஒரு சாண்) கீழ்ப்படியாமல் போகிறாரோ, அவர் இஸ்லாத்திற்கு முந்தைய அறியாமைக் காலத்தில் இறந்தவர்களைப் போன்று இறப்பார். (அதாவது கீழ்ப்படியாத பாவிகளாக)."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح