அபூ தர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
நான் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் என்னை ஒரு நிர்வாகப் பணியில் நியமிக்க மாட்டீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் தங்கள் கையால் எனது தோளின் மீது தட்டிவிட்டுச் சொன்னார்கள்: "அபூ தர்ரே! நீர் பலவீனமானவர். நிச்சயமாக அது (பதவி) ஓர் அமானிதம் ஆகும். மேலும், நிச்சயமாக அது மறுமை நாளில் இழிவாகவும் கைசேதமாகவும் இருக்கும்; அதை அதற்குரிய உரிமையுடன் பெற்று, அதில் தன் மீதுள்ள கடமையை நிறைவேற்றியவரைத் தவிர."