நபி (ஸல்) அவர்கள் ஒரு வாக்கியத்தைப் பேசினால் (ஒரு விஷயத்தைச் சொன்னால்), மக்கள் அதை அவர்களிடமிருந்து சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அதை மூன்று முறை திரும்பக் கூறுவார்கள். மேலும் அவர்கள் உள்ளே நுழைய அனுமதி கேட்டால், (கதவைத்) தட்டி மூன்று முறை ஸலாம் கூறுவார்கள்.