இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2433 aஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي وَمُحَمَّدُ بْنُ بِشْرٍ الْعَبْدِيُّ، عَنْ إِسْمَاعِيلَ،
قَالَ قُلْتُ لِعَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى أَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَشَّرَ خَدِيجَةَ بِبَيْتٍ
فِي الْجَنَّةِ قَالَ نَعَمْ بَشَّرَهَا بِبَيْتٍ فِي الْجَنَّةِ مِنْ قَصَبٍ لاَ صَخَبَ فِيهِ وَلاَ نَصَبَ ‏.‏
இஸ்மாயீல் அறிவித்தார்கள்:

நான் அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா (ரழி) அவர்களிடம், "கதீஜா (ரழி) அவர்களுக்கு சொர்க்கம் உண்டு என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நற்செய்தி கூறினார்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்: ஆம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கதீஜா (ரழி) அவர்களுக்கு, சொர்க்கத்தில் எந்த இரைச்சலும் எந்தச் சோர்வும் இல்லாத, முத்துக்களாலான ஒரு மாளிகையைக் கொண்டு நற்செய்தி கூறினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح