"மாலிக் பின் ஹுபைரா (ரழி) அவர்கள் ஒரு ஜனாஸாவிற்குத் தொழுகை நடத்தும்போது, மக்கள் குறைவாக இருந்தால், அவர்களை மூன்று வரிசைகளாகப் பிரிப்பார்கள். பிறகு கூறுவார்கள்: 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எவருக்காக மூன்று வரிசைகள் தொழுகை நடத்துகின்றனரோ, அவருக்கு (சொர்க்கம்) உறுதியாகிவிட்டது.”'"