இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

143சுனனுந் நஸாயீ
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنِ الْعَلاَءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ أَلاَ أُخْبِرُكُمْ بِمَا يَمْحُو اللَّهُ بِهِ الْخَطَايَا وَيَرْفَعُ بِهِ الدَّرَجَاتِ إِسْبَاغُ الْوُضُوءِ عَلَى الْمَكَارِهِ وَكَثْرَةُ الْخُطَا إِلَى الْمَسَاجِدِ وَانْتِظَارُ الصَّلاَةِ بَعْدَ الصَّلاَةِ فَذَلِكُمُ الرِّبَاطُ فَذَلِكُمُ الرِّبَاطُ فَذَلِكُمُ الرِّبَاطُ ‏ ‏ ‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"எதன் மூலம் அல்லாஹ் பாவங்களை அழித்து, (மக்களின்) அந்தஸ்துகளை உயர்த்துகிறானோ அதைப்பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? சிரமமான நேரங்களிலும் முழுமையாக உளூ செய்வது 1, மஸ்ஜிதுக்கு அதிகமாக எட்டு வைத்துச் செல்வது, மேலும் ஒரு ஸலாத்திற்குப் பிறகு அடுத்த ஸலாத்திற்காகக் காத்திருப்பது. அதுவே உங்களுக்கு ரிபாத் ஆகும், அதுவே உங்களுக்கு ரிபாத் ஆகும், அதுவே உங்களுக்கு ரிபாத் ஆகும்." 1 இஸ்ஃபாகுல் உளூ

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)