அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் ஒருவர் தமது இல்லத்தில் (உளூ அல்லது குளிப்பின் மூலம்) தம்மைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, பின்னர் அல்லாஹ்வின் கடமைகளில் ஒரு கடமையான தொழுகையை நிறைவேற்றுவதற்காக அல்லாஹ்வின் இல்லங்களில் ஓர் இல்லத்திற்கு (பள்ளிவாசலுக்கு) நடந்து செல்கிறாரோ, அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும், ஒன்று ஒரு பாவத்தை அழிக்கும், மற்றொன்று ஒரு தகுதியை உயர்த்தும்.